×

காஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் சமையல் செய்யும் போராட்டம்

திருப்பூர், டிச.22:  வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும், காஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நேற்று திருப்பூர் குமரன் சிலை அருகே சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மைதிலி தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டு மாதர் சங்கங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அனிவித்து, விறகு அடுப்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், செயலாளர் பவித்ரா தேவி, பொருளாளர் ஷகிலா, மாநில செயற்குழு உறுப்பினர் சாவித்ரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Mather ,protest ,gas price hike ,Union ,
× RELATED மீஞ்சூர் அருகே சாலையை சீரமைக்க கோரி மக்கள் மறியல் போராட்டம்..!!